வேலூர் மாவட்டத்துக்கு 4 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வருகை


வேலூர் மாவட்டத்துக்கு 4 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வருகை
x
தினத்தந்தி 13 May 2021 12:01 AM IST (Updated: 13 May 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்துக்கு 4 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வருகை

வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை
 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 9-ந் தேதி வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் டோஸ் கோவில்டு தடுப்பூசிகள் வந்தன. அவை 2-வது முறை தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 4 ஆயிரம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் வேலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளன. இந்த தடுப்பூசிகளும் 2-வது முறை தடுப்பூசி போடும் நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. 

ஏராளமானோர் 2-வது முறை தடுப்பூசி போட உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிகள் ஓரிரு நாளில் வர உள்ளன. எனவே 2-வது கட்ட கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்காக காத்திருப்போர் பயப்பட வேண்டாம். கூடுதலாக டோஸ் வந்தபின்னர் அனைவருக்கும் தடுப்பூசிகள் போட ஏற்பாடு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story