யஷ்வந்தபுரம்-தனபூர் இடையே சிறப்பு ரெயில்
17-ந் தேதி இயங்குகிறது யஷ்வந்தபுரம்-தனபூர் இடையே சிறப்பு ரெயில்
பெங்களூரு:
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து பீகார் மாநிலம் தனபூருக்கு வருகிற 17-ந் தேதி ஒருமார்க்கமாக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்:-07367) இயங்க உள்ளது. யஷ்வந்தபுரத்தில் இருந்து இரவு 12.15 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது.
ஜோலார்பேட்டை, பெரம்பூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், குர்தா ரோடு, பத்ராக், அத்ரா, அசன்சோல், மதுபூர், ஜக்ஜா, கியூல் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று, செல்லும்.
சிக்ஜாஜூர் ரெயில்வே யார்டில் நடந்து வரும் பராமரிப்பு பணி காரணமாக உப்பள்ளி-சித்ரதுர்கா இடையே இருமார்க்கமாக இயங்கும் ரெயில்(07347/07348) 13-ந் தேதி(இன்று) முதல் 17-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story