ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 12 May 2021 6:48 PM GMT (Updated: 12 May 2021 6:48 PM GMT)

அருமனை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முடியாததால் மிளகாய்பொடியை தூவி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அருமனை:
அருமனை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முடியாததால் மிளகாய்பொடியை தூவி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொள்ளை முயற்சி
அருமனை அருகே மேல்புறம் சந்திப்பில் இருந்து பனச்சமூடு செல்லும் சாலையில் செம்மங்காலை சந்திப்பு பகுதியில் ஒரு தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. 
இந்தநிலையில் நேற்று காலை இந்த மையத்துக்கு பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் சென்றனர். அப்போது, மையத்துக்குள் மிளகாய்பொடி தூவப்பட்டு இருப்பதையும், ஏ.டி.எம். எந்திரத்தின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
உடனே இதுபற்றி அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ  இடத்துக்கு விரைந்து சென்று ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 
பல லட்சம் தப்பியது
அப்போது, நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். 
ஆனால், எந்திரத்தை உடைக்க முடியாததால் மிளகாய்பொடியை தூவி தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனால், எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய்கள் தப்பியதாக கூறப்படுகிறது. மேலும், ஏ.டி.எம். மையத்தின் எதிரே உள்ள கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளனர். 
வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகளையும் அந்த வங்கி நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அதை ஆய்வு செய்த பின்னர், தான் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது யார் என்பது தெரியவரும் என்றனர். 
இதுகுறித்து ஏ.டி.எம். கட்டிடத்தின் உரிமையாளர் அருள் பிரகாஷ்(வயது 45) கொடுத்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story