சாராயம் காய்ச்சிய கணவன் மனைவி கைது


சாராயம் காய்ச்சிய கணவன் மனைவி கைது
x
தினத்தந்தி 13 May 2021 12:46 AM IST (Updated: 13 May 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

சாராயம் காய்ச்சிய கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.

பேரையூர், மே.
சாப்டூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் மெய்யனுத்தம்பட்டி மொட்டமலை அடிவார பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள தோட்டத்தில் அதன் உரிமையாளர் செல்வம்(வயது 45) அவருடைய மனைவி செல்வி(40) ஆகியோர் விற்பனை செய்வதற்காக சாராயத்தை காய்ச்சி பதுக்கி வைத்திருந்தனர். மேலும் சாராய ஊறலும் வைத்திருந்தனர். இதையடுத்து செல்வம் மற்றும் செல்வியை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story