பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 200 பேருக்கு மதிய உணவு


பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 200 பேருக்கு மதிய உணவு
x
தினத்தந்தி 13 May 2021 1:04 AM IST (Updated: 13 May 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

பெரம்பலூர்
 பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவுக்கு 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களின் அன்னதானம் திட்டத்தின் கீழ் நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள், இதர நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என மொத்தம் 200 பேருக்கு மதிய உணவு பொட்டலமாக வழங்கப்பட்டது. இதனை பெரம்பலூர் தாசில்தார் சரவணன், மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-1 மல்லிகா, கோவில் செயல் அலுவலர்கள் அருண்பாண்டியன் (சிறுவாச்சூர்), அனிதா (பெரம்பலூர்), ஜெயலதா (செட்டிகுளம்) ஆகியோர் வழங்கினர். இதில் கோவில்களின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story