களை இழந்த செவிலியர் தினம்: கொண்டாட்டத்தை மறந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட நர்சுகள்
செவிலியர் தினம் கொண்டாட்டத்தை மறந்து நர்சுகள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
செவிலியர் தினம் கொண்டாட்டத்தை மறந்து நர்சுகள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
செவிலியர் தினம்
சர்வதேச செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் முன்னோடியாக விளங்குபவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். கைவிளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12-ந் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
செவிலியர்கள் விருப்பு வெறுப்பு இன்றி இந்த சமுதாயத்தில் நோயினால் வாடுபவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று செவிலியர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் அவரது பிறந்தநாள் நேற்று சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டது.
உறுதிமொழி
வழக்கமாக செவிலியர் தினம் செவிலியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா தொற்றினால் முன்களப்பணியாளர்களாக தங்கள் உயிரைப்பிடித்துக்கொண்டு பிறரின் உயிரை பாதுகாக்க பணியாற்றி வரும் செவிலியர்கள் கொண்டாட்டங்களில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினத்தையொட்டி நேற்று தலைமை கண்காணிப்பு செவிலியர்கள் சரஸ்வதி, சண்முக வடிவு ஆகியோர் தலைமையில் செவிலியர்கள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றினர். பின்னர் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டு தங்கள் பணிகளை தொடர்ந்தனர். தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க நிர்வாகி சகிலா மற்றும் சில செவிலியர்கள் பங்கேற்றனர். இதுபற்றி செவிலியர்கள் கூறும்போது, “இது கொண்டாட்டத்துக்கான காலம் இல்லை. எனவே முதலில் கொரோனாவை வெற்றி கொள்ள வேண்டும். எங்கள் பணிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்கள்.
Related Tags :
Next Story