பெருந்துறையில் தனியார் ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் படுகாயம் டிரைவர் கைது


பெருந்துறையில் தனியார் ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் படுகாயம் டிரைவர் கைது
x
தினத்தந்தி 13 May 2021 2:36 AM IST (Updated: 13 May 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் தனியார் ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார். டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சித்தோடு அருகே உள்ள நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 32). இவர் விஜயமங்கலம் சென்றுவிட்டு, ஈரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தார். பெருந்துறை சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே அவர் சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோகனின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மோகன் படுகாயம் அடைந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்ைத ஏற்படுத்தியதாக ஆம்புலன்ஸ் டிரைவரான திருப்பூரை சேர்ந்த முகமது ஹபீப் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story