500 ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்ட நிலை
சிவகாசி தாலுகாவில் புதிதாக வழங்கப்பட்ட 500 ரேஷன்கார்டுகள் முடக்கப்பட்ட நிலை உள்ளது. இதனை நடைமுறைக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி தாலுகாவில் புதிதாக வழங்கப்பட்ட 500 ரேஷன்கார்டுகள் முடக்கப்பட்ட நிலை உள்ளது. இதனை நடைமுறைக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுகள்
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 143 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 600 பேருக்கு மாதந்தோறும் பொருட்கள் வழங்கப்படுகிறது. புதிய ரேஷன் கார்டு கேட்டு மனு கொடுத்த 500 பேரின் மனுக்களை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கி உள்ளது.
வினியோகம்
இந்தநிலையில் புதிய ரேஷன் கார்டுகள் கடந்த வாரம் முதல் சம்பந்தப்பட்டவர்களுக்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்டவழங்கல் பிரிவு மூலம் வழங்கப்பட்டது. புதிய கார்டுகளை பெற்றவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை கேட்ட போது உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்பட்டுள்ளது என கடை ஊழியர்கள் கூறுவதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஒரு சில பெண்கள் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவை தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த மாத ரேஷன் பொருட்கள் கிடைக்காது, அடுத்த மாதம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பலர் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் தவித்து வருகிறார்கள்.
ரூ.2 ஆயிரம்
இந்தநிலையில் தமிழக அரசு கொரோனா நிவாரண தொகையாக அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த தொகை பெறுவதற்கான டோக்கன் கடந்த 10-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
டோக்கன் வழங்க நேற்று கடைசி நாள் என்றாலும் இன்னும் பலருக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் டோக்கன் கிடைக்காதவர்கள் வருகிற 16-ந்தேதி ரேஷன் கடைகளை முற்றுகையிட வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு முன் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய குறுந்தகவல்கள் அனுப்பி தாமதம் ஏற்பட்டாலும் உங்களுக்கு நிவாரணம் தொகை கிடைக்கும் என்று உறுதிப்படுத்த வேண்டும். தற்போது புதிய ரேஷன் கார்டு பெற்ற பலர் எங்களுக்கு அரசின் நிவாரண தொகையாவது கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது அதையும் மாவட்ட நிர்வாகம் தீர்க்க வேண்டும்.
எனவே சிவகாசி தாலுகாவில் புதிதாக வழங்கப்பட்ட 500 ரேஷன் கார்டுகளை நடைமுறைக்கு கொண்டு வரவும், அவர்களுக்கு நிவாரணத்தொகை கிைடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
Related Tags :
Next Story