மேலும் 535 பேருக்கு கொரோனா


மேலும் 535 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 May 2021 3:16 AM IST (Updated: 13 May 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் மேலும் 535 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 535 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. 
பலி உயர்வு 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 24,121 ஆக உயர்ந்துள்ளது.
21,012 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,840 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
ஆக்சிஜன் படுக்கை 
விருதுநகர் நகராட்சி காலனி, ஜெயராம் நகர், கூந்தப்பனை தெரு, அல்லம்பட்டி, வடமலைக்குறிச்சி, ெரயில்வே காலனி, குல்லூர்சந்தை, முத்துராமன் பட்டி, கச்சேரி ரோடு, பாண்டியன் நகர், சிவந்திபுரம், ஆத்துமேடு, மோகன் ராஜேஷ் காலனி, கருப்பசாமி நகர்,  மணி நகரம், என்.ஜி.ஓ. காலனி, பெத்தனாட்சி, நகர்வேல்சாமி நகர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு 512 ஆக்சிஜன் படுக்கைகளும், 307ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும், 107 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் உள்ளன. இதில் 384 ஆக்சிஜன் படுக்கைகளும், 260 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும் 51 தீவிர சிகிச்சைப் பிரிவுபடுக்கைகளும் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,137 படுக்கைகளில் 445 படுக்கைகளில ்பாதிப்படைந்தோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 692 படுக்கைகள் காலியாக உள்ளன.

Next Story