தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2021 3:27 AM IST (Updated: 13 May 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 
சிவகாசி ஸ்டேட ்பாங்கு காலனியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் மகன் சக்திசரவணக்குமார் (வயது 26). இவருக்கும் விருதுநகரை சேர்ந்த பொன்மலர் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் குடிபழக்கத்துக்கு அடிமையான சக்திசரவணக்குமார் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பொன்மலர் தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் தனியாக வசித்து வந்த சக்திசரவணகுமாருக்கு அவரது தங்கை மாரீஸ்வரி சாப்பாடு வழங்கி வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டுவிட்டு சென்றவர் பின்னர் இரவு சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாரீஸ்வரியின் கணவர் அங்கு சென்ற போது சக்திசரவணக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

Next Story