கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை


கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2021 3:27 AM IST (Updated: 13 May 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொைல செய்து கொண்டார்.

சிவகாசி, 
திருத்தங்கல் ஜங்கால்நாயுடு தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 68). இவருக்கு கணபதியம்மாள் என்ற மனைவியும், உலகநாதன், செந்தில், மாரியப்பன், ஜோதிநாதன் என்ற 4 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வடை மாஸ்டராக வேலை செய்து வந்த குப்புசாமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலம் சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குப்புசாமியை பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக நேற்று மிதந்தார். தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் முதியவர் குப்புசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story