நெல்லைக்கு 2 ரெயில்களில் 3,911 டன் அரிசி வந்தது
தஞ்சாவூர், தெலுங்கானாவில் இருந்து நெல்லைக்கு 2 ரெயில்களில் 3,911 டன் அரிசி கொண்டு வரப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் மாதந்தோறும் அரிசி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தஞ்சாவூரில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இவை நெல்லை சந்திப்பு ெரயில் நிலையத்தில் உள்ள சரக்கு இறங்குதளத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றினார்கள். இந்த அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட ரெயிலில் 2,661 டன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த அரிசி மூட்டைகள் நெல்லையில் உள்ள இந்திய உணவுக்கழக குடோனுக்கு லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. நேற்று மட்டும் 2 ரெயில்களில் மொத்தம் 3,911 டன் அரிசி கொண்டு வரப்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து 25 ரெயில் பெட்டிகளில் உர மூட்டைகளும், தூத்துக்குடியில் இருந்து 20 பெட்டிகளில் உர மூட்டைகளும் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டன.
Related Tags :
Next Story