நெல்லை, களக்காட்டில் 3 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு


நெல்லை, களக்காட்டில் 3 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 13 May 2021 3:59 AM IST (Updated: 13 May 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, களக்காட்டில் 3 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

நெல்லை:
தமிழகத்தில் நேற்று 3-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி விதிகளை மீறி கடைகள் செயல்படுகிறதா? என்பதை நெல்லையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள் நேற்று பிற்பகலில் ஆய்வு நடத்தினர். அப்போது வடக்கு புறவழிச்சாலையில் ஒரு டீக்கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். இதையடுத்து அந்த டீக்கடையை பூட்டி உடனடியாக அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த முழு ஊரடங்கு முடியும் வரை டீக்கடையை திறக்கக்கூடாது என்று டீக்கடை சுவரில் அறிவிப்பும் ஒட்டினார்கள்.

களக்காடு நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுஷ்மா உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் களக்காடு பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது அண்ணாசாலையில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கும் அபராதம் விதித்தனர்.

Next Story