நெல்லையப்பர் கோவில் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு


நெல்லையப்பர் கோவில் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு
x
தினத்தந்தி 13 May 2021 4:23 AM IST (Updated: 13 May 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவில் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

நெல்லை:
தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்து வருகிறது. இந்த நிலையில் கோவில்கள் சார்பிலும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி நேற்று நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் அன்னதான கூடத்தில் சாம்பார் சாதம் தயார் செய்து உணவு பொட்டலங்களாக கட்டப்பட்டன.

இந்த உணவு பொட்டலங்களை அதிகாரிகள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் எடுத்துச்சென்றனர். அங்கு கொரோனா நோயாளிகளின் உதவியாளர்களிடம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சங்கர், மண்டல இணை ஆணையாளர் அலுவலக மேலாளர் ரவீந்திரன், செயல் அலுவலர்கள் ராமராஜா (நெல்லையப்பர் கோவில்), ஜெகநாதன் (பாபநாசம் கோவில்), ராஜேந்திரன் (வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவில்), சண்முகம் (சாலைக்குமாரசுவாமி கோவில்), மகேசுவரி (ராமசாமி கோவில்) மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உணவு பொட்டலங்கள் வழங்கும் பணியை விரிவுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



Next Story