செவிலியர்களுக்கு இலவச பெட்ரோல்
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் செவிலியர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவர்களும், செவிலியர்களும் முன்களத்தில் நின்று கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நேற்று செவிலியர்களுக்கு தலா 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களது வாகனங்களுக்கு 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக நிரப்பி சென்றனர். இது பெரிதும் வரவேற்பை பெற்றது.
Related Tags :
Next Story