தென்காசி மாவட்ட கோவில்கள் சார்பில் அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு உணவு
தென்காசி மாவட்ட கோவில்கள் சார்பில் அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
தென்காசி:
கோவில்களில் இருந்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில், குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில், இலஞ்சி குமாரர் கோவில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில், கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவில் மற்றும் கிருஷ்ணாபுரம் அபயவரத ஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றின் சார்பில் 365 உணவுப்பொட்டலங்கள் நேற்று தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. இதனை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர்கள் கேசவராஜன், சுசீலாராணி, தென்காசி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் கலாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்களில் தினமும் வழங்கப்படும் அன்னதான திட்ட உணவுப்பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழக்கம்போல் வழங்கப்படுவதோடு, கூடுதலாக இந்த உணவுப் பொட்டலங்கள் மருத்துவத்துறையினரால் தெரிவிக்கப்படும் தேவைக்கேற்ப தினமும் வழங்கப்படும் என்று தென்காசி கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story