வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவால் விலங்குகள் பாதிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை


வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவால் விலங்குகள் பாதிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 13 May 2021 3:40 PM IST (Updated: 13 May 2021 3:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வனத்துறையில் உயிரியல் பூங்காக்கள் மற்றும் இயற்கை காடுகளில் வாழும் வனவிலங்குகள் கொரோனா பாதிப்பு இல்லாத வகையில் பராமரிக்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கடந்த ஏப்ரல் 20-ந்தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

பூங்காவில் உள்ள கூடங்களில் தினமும் கிருமிநாசினி தெளித்தல், உணவு கொண்டுவரும் வாகனங்களை ‘ஹைப்போகுளோரைடு சொல்யூசன்' மூலம் சுத்தப்படுத்துதல், பூங்கா ஊழியர்களுக்கு தினமும் உடல் வெப்பநிலை பரிசோதித்தல், பாதுகாப்பு முககவசம், கையுறை அளித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், வன விலங்குகள் உணவை ஊதா கதிர்கள் மூலம் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் மூலம் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கால்நடை டாக்டர்கள் குழு தொடர் கண்காணிப்பு மூலமும், வன விலங்குகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

விலங்குகளின் பாதுகாப்புக்காக சிறப்பு படை அமைக்கப்பட்டு சரகர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழு இரவு, பகலாக ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு கிராம மக்களிடையே தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்கண்ட தகவல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story