பையனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.70 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்


பையனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.70 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 May 2021 3:47 PM IST (Updated: 13 May 2021 3:47 PM IST)
t-max-icont-min-icon

பையனூரில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 560 மதுபாட்டில்களை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்கள் பதுக்கல்
கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மதுகடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு காலத்தில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது விற்பதற்காக மாமல்லபுரம் அடுத்த பையனூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் பையனூரில் உள்ள வீட்டுக்கு சென்று மூடப்பட்டிருந்த ஒரு அறையை திறந்து சோதனை செய்தனர்.

போலீஸ் விசாரணை
அங்கு பெட்டி, பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிராந்தி வகையை சேர்ந்த கால் லிட்டர் கொள்ளளவு கொண்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பையனூரை சேர்ந்த செல்வம் (வயது 40) என்பவர் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதற்கு முன்னதாக மாமல்லபுரம் பகுதியில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாமல்லபுரம் போலீசார் மது பாட்டில்கள் பதுக்கல் வழக்கில் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 560 மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும்.

Next Story