திருவள்ளூர் மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க கோரிக்கை


திருவள்ளூர் மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2021 11:30 AM GMT (Updated: 13 May 2021 11:30 AM GMT)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி அதிக அளவு பாதிப்பையும், பலி எண்ணிக்கையும் ஏற்படுத்தி வருகிறது.

இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு வருகின்ற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து தற்போது அமலில் உள்ளது.இதன் காரணமாக நண்பகல் 12 மணி வரை அனைத்து கடைகளும் இயங்க வேண்டும் என்றும், ஓட்டல்கள், மருந்து கடைகள் போன்றவை வழக்கம் போல் இயங்கும் என அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டது. இதன் காரணமாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். மேலும் உடற்பயிற்சி கூடங்கள் 
மூடப்பட்டு இருப்பதால் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருபவர்கள் வருமானம் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். எனவே உடற்பயிற்சி செய்து மக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உடற்பயிற்சி கூடத்தை நடத்துபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் மூடப்பட்டு இருக்கும் அனைத்து உடற்பயிற்சி கூடங்களையும் தமிழக அரசு திறந்துவைக்க வேண்டும் என உடற்பயிற்சிக் கூட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story