கடை வியாபாரிகள், ஊழியர்களுக்கு சளி மாதிரி சேகரிப்பு


கடை வியாபாரிகள், ஊழியர்களுக்கு சளி மாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 13 May 2021 6:15 PM IST (Updated: 13 May 2021 6:15 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் கடை வியாபாரிகள், ஊழியர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

ஆரணி

ஆரணியில் கடை வியாபாரிகள், ஊழியர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. 

ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் மளிகைக் கடைகள், ஜெனரல் ஸ்டோர்ஸ், பேப்பர் கடைகள், குளிர்பானக் கடைகள், உரக்கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள் ஆகியவைகள் உள்ளன. 

மேற்கண்ட கடை வியாபாரிகள், ஓட்டல்கள், இவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு செய்யாறு சுகாதார துணை இயக்குனர் டாக்டர் சங்கீதா மேற்பார்வையில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா தலைமையில் நேற்று கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

அதில் 45 கடை வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள், 82 நகராட்சி ஊழியர்கள் ஆகியோருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

 அதில் யாருக்கேனும் தொற்று உறுதியானால் அந்தக் கடையை ஒரு வாரம் மூட வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில கடைக்காரர்கள் 24-ந்தேதி வரை கடையடைப்பு நடத்தி கொள்கிறோம், எனக் கூறி விட்டு சென்றனர்.


Next Story