கொரோனா பாிசோதனை


கொரோனா பாிசோதனை
x
தினத்தந்தி 13 May 2021 6:37 PM IST (Updated: 13 May 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சா் கயல்விழி செல்வராஜிக்கு கொரோனா பாிசோதனை

குண்டடம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தோ்தலில் தி.மு.க. சாா்பில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கயல்விழி செல்வராஜ், தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 
அதை தொடர்ந்து  எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழாவில் அவர் கலந்துகொண்டாா். பின்னர் தாராபுரம் வந்த அமைச்சா் கயல்விழி செல்வராஜ் நேற்று திருப்பூா் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடந்த ஒருகூட்டத்தில் கலந்து கொள்ள அவா் சென்றாா். அதற்கு முன்பாக தாராபுரம் அரசு ஆஸ்பத்திாிக்கு சென்ற அவா் அங்கு கொரோனா பாிசோதனை செய்து கொண்டாா். 
அப்போது தாராபுரம் அரசு ஆஸ்பத்திாி தலைமை மருத்துவா் சிவபாலன் தலைமையிலான குழுவினா் அமைச்சரிடம் சளி மாதிாிகளை சேகாித்தனா். அப்போது அவரது கணவரான மாவட்ட வழக்கறிஞா் அணி அமைப்பாளா் செல்வராஜ் உடன் இருந்தாா்.

Next Story