3 நிதி நிறுவனங்களுக்கு சீல்
தாராபுரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி திறந்து இருந்த 3 நிதி நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பின்வாசல் வழியாக வியாபாரம் செய்த ஜவுளிக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
குண்டடம்
தாராபுரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி திறந்து இருந்த 3 நிதி நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பின்வாசல் வழியாக வியாபாரம் செய்த ஜவுளிக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
கொரோனா
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக காய்கறிகடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றுக்கு பகல் 12 மணி வரையில் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று அத்தியாவசிய பொருட்களான மருந்து, பால் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையம் காலை முதல் இரவு வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேன்சி ஸ்டோர், ஜவுளிக்கடைகள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் திறக்க அனுமதியில்லை. ஆனாலும் விதிமுறைகளை மீறி யாராவது திறந்து வைத்து விற்பனை செய்கிறார்களா என தாராபுரம் மண்டல தாசில்தாா் திரவியம் தலைமையில் வருவாய் ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாாிகள் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். தாராபுரம் கடைவீதி, பஸ்நிலையம், பொள்ளாச்சி ரோடு உள்பட நகாின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினா்.
நிதி நிறுவனங்களுக்கு சீல்
அப்போது தாராபுரம்-பொள்ளாச்சி ரோட்டில் 3 தனியார் நிதி நிறுவனங்கள் திறந்து இருந்தன. உடனே அங்கு சென்ற அதிகாாிகள் கொரோனா பரவல் ஊரடங்கில் வங்கிகள் மட்டும் தான் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதிநிறுவனங்கள் செயல்பட அனுமதி கிடையாது. எனவே உடனே நிறுவனத்தை மூடுங்கள் என்று உத்தரவிட்டனா். தொடா்ந்து ஊழியா்களை வெளியேற்றிய அதிகாாிகள் அந்த நிறுவனங்களை பூட்டி சீல் வைத்தனா்.
அதுபோன்று பொள்ளாச்சி ரோட்டில் ஒரு பேன்சி ஸ்டோர் திறந்து இருந்தது. அங்கு சென்ற அதிகாாிகள் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனா். கடைவீதியில் திறந்து இருந்த 6 சிறிய ஜவுளிகடைகளுக்கு தலா ரூ.500 வீதம், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் சாலையில் சென்ற பொதுமக்களிடம் எப்படிபட்ட முககவசம் அணியவேண்டும், கைகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என அதிகாாிகள் அறிவுரை வழங்கினா்.
பின்வாசல் வழியாக வியாபாரம்
ரம்ஜான் மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் போன் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நகைகளை முன்பதிவு செய்தனா். இதற்கிடையில் ரம்ஜான் மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு நேரடி விற்பனையை செய்ய நேற்று பொள்ளாச்சி ரோடு, கடைவீதியில் உள்ள சில நகைகடைகள் ஏற்பாடு செய்தன. நகைக்காக முன்பதிவு செய்தவா்களை குறிப்பிட்ட நேரத்திற்கு கடைக்கு வருமாறு தகவல் கொடுத்தனா். அதன்படி கடைகளுக்கு வந்தவா்களுக்கு அவா்களுக்கு தேவையான நகைகளை கடைகாரா்கள் நடைக்கடையின் பின்வாசலை திறந்து விற்பனை செய்தனா்.
இதுகுறித்து தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் மகேந்திரன் தலைமையிலான போலீசாா் அதிரடி ஆய்வு நடத்தினா். அப்போது ஒரு சில நகை்கடை, ஜவுளிகடைகளின் பின்பக்க வாசல் வழியாக பொதுமக்கள் சென்றுவந்தது தொியவந்தது. அதைத் தொடா்ந்து அதிரடியாக அந்த கடைகளுக்குள் நுழைந்த போலீஸ் இன்ஸ்பெக்டா் மகேந்திரன் கடை உாிமையாளா்களை எச்சாிக்கை செய்ததோடு, உடனே கடையை அடைக்கும்படியும் உத்தரவிட்டாா். அதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த சம்பவம் நேற்று கடைவீதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போக்குவரத்து நெரிசல்
இந்த நிலையில் தாராபுரத்தில் மளிகை, காய்கறிகள் வாங்க பொதுமக்கள் காலை முதல் மதியம் வரை தங்கள் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு வந்துசெல்கின்றனா். அதுபோன்று உழவா்சந்தை மற்றும் தினசாி காய்கறி மாா்கெட், இறைச்சி கடைகள் போன்றவற்றுக்கும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனா். இதனால் கடைவீதி சாலைகளில் போக்குவரத்து நொிசல் ஏற்படும் அளவிற்கு பொதுமக்கள் சுற்றித்திாிகின்றனா். மேலும் தாராபுரம் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story