வடமாநில தொழிலாளர்கள்
பனியன் நிறுவனங்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல வடமாநில தொழிலாளர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
திருப்பூர்
பனியன் நிறுவனங்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல வடமாநில தொழிலாளர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
பனியன் நிறுவனங்கள் மூடல்
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாள் ஒன்றின் பாதிப்பு 500ஆக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு விஷ்வரூபம் எடுத்து வருகிறது. நாள் ஒன்றின் பாதிப்பு தற்போது 800ஐ நெருங்கும் அளவிற்கு இருந்து வருகிறது. இதற்கிடையே தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் பின்னலாடை நிறுவன தொழிலாளர்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வந்தனர். இருப்பினும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் தொழில்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இன்றுவெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் வருகிற 24ந் தேதி வரை பனியன் நிறுவனங்களை மூடுவது என முடிவு செய்யப்பட்டது.
டிக்கெட் முன்பதிவு
இதன் காரணமாக திருப்பூரில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ரெயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். மேலும், வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். தற்போது பனியன் நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனால் திருப்பூர் ரெயில்வே நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் நீண்ட வரிசையில் காத்துஇருந்து வடமாநில தொழிலாளர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள். ரெயில் நிலையத்தில் கூட்டமும் அலைமோதி வருகிறது.
Related Tags :
Next Story