நின்ற லாரி மீது கார் மோதி பெண் பலி


நின்ற லாரி மீது கார் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 13 May 2021 7:22 PM IST (Updated: 13 May 2021 7:22 PM IST)
t-max-icont-min-icon

நின்ற லாரி மீது கார் மோதி பெண் பலியானார்.

மேலூர்,மே
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தனபாலன். இவரது மனைவி சலசா (வயது 40). இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் கேரள மாநிலம் கொல்லத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் அகஸ்டின் ஓட்டினார். மேலூர் அருகே நான்கு வழிச் சாலையில் உள்ள விநாயகபுரம் எனும் இடத்தில் அதிகாலை 4 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சலசா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துபோனார். படுகாயமடைந்த தனபாலன் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டிரைவர் மற்றும் குழந்தைகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story