அந்தேரியில் மாமாவை கொலை செய்த வாலிபர் கைது
அந்தேரியில் மாமாவை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை அந்தேரி மேற்கு, ஹில்பர்ட் ரோடு ஸ்ரீகிருஷ்ணா சொசைட்டியில் வசித்து வந்தவர் சிவ்சங்கர் (வயது43). இவரது வீட்டருகே உறவினர் சுதாகர்(36) வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் சுதாகர், மாமா சிவ்சங்கரின் வீட்டை கடந்து சென்று உள்ளார்.
அப்போது அங்கு பாட்டு கேட்டுக்கொண்டு நின்று இருந்த மாமா மகனின் இயர்போனை சுதாகர் விளையாட்டாக பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் அங்கு வந்த சிவ்சங்கர் மகனிடம் சண்டை போட்ட சுதாகரை கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சிவ்சங்கரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா். அங்கு சிவ்சங்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாமாவை கொலை செய்த சுதாகரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story