பெங்களூருவில் சோதனையின் போது போலீசாரிடம் சிக்காமல் காரை ஓட்டி சென்ற வாலிபர்கள்


பெங்களூருவில் சோதனையின் போது போலீசாரிடம் சிக்காமல் காரை ஓட்டி சென்ற வாலிபர்கள்
x
தினத்தந்தி 13 May 2021 8:15 PM IST (Updated: 13 May 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சோதனையின் போது போலீசாரிடம் சிக்காமல் காரை ஓட்டி சென்ற வாலிபர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களிடம் இருந்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். பாகலகுன்டே போலீசார், பீனியா 8-வது மைல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

போலீசாரை பார்த்ததும், அவர்களிடம் சிக்காமல் இருக்க வாலிபர்கள் சிலர் தாங்கள் வந்த காரை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றார்கள். போலீசார், வாலிபர்கள் சென்ற காரை விரட்டி சென்றனர்.

பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வைத்து அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 3 வாலிபர்கள் இருந்தனர். தங்களது கார் பறிமுதல் செய்யப்படும் என்பதால், நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாக 3 பேரும் தெரிவித்தனர். ஆனாலும் விதிமுறைகளை மீறியதாக காரை பறிமுதல் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story