கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்


கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 May 2021 9:09 PM IST (Updated: 13 May 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது.

திண்டுக்கல் : 


திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை பேரூராட்சியில் 6, 11, 15 வார்டுகள் மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகம் ஏற்பட்டது. 

இதனை தடுக்க  பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு தலைமையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் அந்த வார்டுகளில் நேற்று தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் படைவீரர்கள், பேரூராட்சி அதிகாரிகளோடு இணைந்து தீயணைப்புத்துறை வாகனத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

இந்த பணியின்போது நிலக்கோட்டை சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், மணி, நாகேந்திரன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் மஞ்சுளா, கல்யாணி ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story