தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் போலீஸ்சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி:
தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் அதிகம் கூடுமிடம் என்பதால் இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா?, அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகின்றனரா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று பார்வையிட்டார். அங்கு போலீசாரின் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் டிரோன் கேமரா மூலம் மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ், போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்
Related Tags :
Next Story