மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் மது விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அச்சனம்பட்டியில் மதுவிற்ற ராமுக்காளை (வயது 53), பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த செல்வி (45) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், சுப்பிரமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சீலப்பாடி ஓம்சக்திநகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு மது விற்ற கன்னிவாடி மணியக்காரன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story