தூத்துக்குடி ஆயுதப்படை குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம்


தூத்துக்குடி ஆயுதப்படை குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 13 May 2021 9:29 PM IST (Updated: 13 May 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஆயுதப்படை குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
தடுப்பூசி விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி வருகிறது.
சிறப்பு முகாம்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாத போலீசார்் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் குடியிருப்புகளில் உள்ள போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஆங்காங்கே தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, அந்தந்த உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.
இதன்படி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தூத்துக்குடி ஆயுதப்படை போலீஸ்  குடியிருப்பில் நேற்று நடந்தது.
போலீசாருக்கு தடுப்பூசி
 முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதன் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு மாற்று வழி தடுப்பூசிதான் இந்த நேரத்தில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கம். தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு சீக்கிரமாக கொரோனா தொற்று வருவதில்லை. அப்படியே தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட உயிரிழப்பு ஏற்படுவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 700 போலீசார் உள்ளனர். இதில் ஆயிரத்து 700 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதம் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
முகாமில் தூத்துக்குடி மாநகர நல அலுவலர் வித்யா, தூத்துக்குடி அரசு மருத்துவர் தினேஷ், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு இளங்கோவன், தூத்துக்குடி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story