கூத்தாநல்லூர் பகுதிகளில் 2 மணிநேரம் பலத்த மழை


கூத்தாநல்லூர் பகுதிகளில் 2 மணிநேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 13 May 2021 9:35 PM IST (Updated: 13 May 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் பகுதியில் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பகுதியில் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அவ்வப்போது சில நாட்கள் லேசான மழை பெய்தாலும், பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் வெயிலின் தாக்கமே அதிகளவில் இருந்து வருகிறது. 
பலத்த மழை 
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல வெயில் சுட்டெரித்தது. மதியம் 12.30 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் லேசான  தூறலுடன் தொடங்கிய மழை பலத்த மழையாக கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பழையனூர், வேளுக்குடி, நாகங்குடி, பொதக்குடி, வக்ராநல்லூர், மரக்கடை, கோரையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்தது. இந்த மழை மதியம் 2.30 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகள், வயல்கள், தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருத்துறைப்பூண்டி பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. 

Next Story