கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் எச்சரிக்கை விடுத்தார்.
கள்ளக்குறிச்சி,
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் நேற்று கள்ளக்குறிச்சி நகர பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிலர் முக கவசம் அணியாமல் சாலையில் சுற்றித்திரிந்தனர்.
அவர்களை முக கவசம் அணியுமாறு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் வலியுறுத்தினார். பல கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றனர். இதைபார்த்த சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
சீல் வைக்கப்படும்
மேலும் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி சிலர் மதியம் 12 மணிக்கு மேலும் காய்கறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி இது போன்று கடையை திறந்து வியாபாரம் செய்தால், கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று உரியைமாளர்களை சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் எச்சரித்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story