உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் மூடல்


உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் மூடல்
x
தினத்தந்தி 13 May 2021 10:28 PM IST (Updated: 13 May 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

உளுந்தூர்பேட்டை, 

 உளுந்தூர்பேட்டை  போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ரவிச்சந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக ராதாகிருஷ்ணன், தனிப்பிரிவு தலைமை காவலராக கோவிந்தராஜ் உள்ளிட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தனிப்பிரிவு தலைமை காவலர் கோவிந்தராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. 8 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் போலீஸ் நிலையம் திறக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story