புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன்
புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 7-ந் தேதி முதல்-அமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்று கொண்டார்.
ஆனால் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பதவியேற்கவில்லை. அதேபோல் அமைச்சரவையும் இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க வசதியாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான லட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.
அதன்படி புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதையடுத்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க் களுக்கு லட்சுமி நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைப்பார். சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தலையும் நடத்தி வைப்பார்.
Related Tags :
Next Story