24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதால் ஆம்புலன்ஸ்களை நிறுத்த இடவசதி வேண்டும்
கோவையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதால் ஆம்புலன்ஸ்களை நிறுத்த இடவசதி செய்து கொடுக்க வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை
கோவையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதால் ஆம்புலன்ஸ்களை நிறுத்த இடவசதி செய்து கொடுக்க வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆம்புலன்ஸ்கள்
கோவையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து பெரிதும் குறைந்து உள்ளது.
ஆனால் ஆம்புலன்ஸ் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.
எந்த சாலையில் பார்த்தாலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதை பார்க்க முடிகிறது.
தனியார், அரசு என்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள பஸ்நிறுத்தம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
டிரைவர்கள் கோரிக்கை
ஆனால் கொரோனா நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்களை நன்றாக கழுவிய பின்னரே, மற்ற நோயாளிகளை அதற்குள் ஏற்றிச்சென்று வருகிறார்கள்.
ஆனால் இந்த ஆம்புலன்ஸ்களை ஒரு இடத்தில் நிறுத்தி கழுவ போதிய இடவசதி இல்லாததால் அதன் டிரைவர்கள் தவித்து வருகிறார்கள்.
எனவே ஆம்புலன்ஸ்களை நிறுத்தி அதை கழுவி சுத்தப்படுத்தவும், தாங்கள் துணிகளை மாற்ற ஓய்வு அறையும் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து மேலும் டிரைவர்கள் கூறியதாவது:-
இடவசதி
உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவையை செய்து வரும் எங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. நாங்கள் நோயாளிகளை அழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த பிறகு எங்களது வாகனத்தை சுத்தம் செய்யவும், ஆம்புலன்ஸ்களை நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பதற்காகவும் இட வசதி இல்லை.
எனவே வேறு வழியின்றி கோவை அரசு ஆஸ்பத்திரி முன்புள்ள பஸ்நிறுத்தம் பகுதியில் நிறுத்த வேண்டிய நிலை இருக்கிறது. மேலும் நாங்கள் 24 மணி நேர சேவை என்பதால் வீடுகளுக்கு சென்று வர முடியாது.
இதனால் உடைகள் கூட மாற்ற முடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். பொதுமக்களை நோய் நொடியில் இருந்து பாதுகாக்க எங்கள் உயிரையும் பணயம் வைத்து ஆம்புலன்ஸ்களில் ஏற்றி உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம். எனவே எங்களுக்கு போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story