கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்


கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 13 May 2021 11:01 PM IST (Updated: 13 May 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்

கோவை

கொரோனா பரவலை தடுக்க வருகிற 24-ந் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

குறிப்பாக கோவை காந்திபுரத்தில் 30-க்கும் மேற்பட்ட செருப்பு தைக்கும் வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். தற்போது பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டதால் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். 

எனவே அவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, கொரோனா காலத்துக்கு முன்பு தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை கிடைத்தது. 

தற்போது ரூ.100 கிடைப்பதே கடினமாக இருக்கிறது. இதனால் குடும்ப செலவுக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். அத்துடன் வீடு வாடகையும் செலுத்த முடியவில்லை. எனவே எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். 


Next Story