மது விற்ற 5 பேர் கைது
மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே சவுந்தராபுரம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், அரவக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 22) என்பவர் தனது ஸ்கூட்டரில் வைத்து மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் ஹரிஹரனை கைது செய்தனர்.
குளித்தலை அருகே உள்ள அய்யனூர் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், குளித்தலை போலீசார் அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (37) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அங்கிருந்த 110 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது விற்றதாக அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்த கதிர் (27), தளவாப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் (52), மகேந்திரன் (32) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story