ஆபத்தான நிலையில் திறந்துகிடக்கும் ஆழ்துளை கிணறு பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
பவித்திரம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் திறந்துகிடக்கும் ஆழ்துளை கிணறு பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்,
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பவித்திரம் கிராமம். இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கோவில் தெரு அருகில் ஆழ்துளை கிணறு ஒன்று ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது. அதில் இருந்த மின் மோட்டார் மாயமாகி போனது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு, மினி டேங்க் மூலம் நாங்கள் தண்ணீர் பிடித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார்கள் மாயமானது. மேலும் ஆழ்துளை கிணறு திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து விபத்தில் சிக்கக் கூடிய சூழல் நிலவி வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் பொருத்தி மினி டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் ஆழ்துளைக் கிணற்றுக்கு மூடி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story