கொரோனா ஊரடங்கு எதிரொலியாக காவிரி-தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
கொரோனா ஊரடங்கு எதிரொலியாக காவிரி-தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணராயபுரம்
வாய்க்கால் வெட்டும் பணி
நதிநீர் இணைப்பின் முதல் கட்டமாக கரூர் மாவட்டம், மாயனூர் காவிரியின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் கடலில் வீணாக சென்று கலக்கும் தண்ணீரை மற்ற வறட்சியான மாவட்டங்களுக்கு கொண்டு சென்று வளம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைக்க மத்திய-மாநில அரசுகள் திட்டம் தீட்டியது.
தற்போது முதல் கட்டமாக காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டுதிருக்காம்புலியூர் கிராமத்தில் தொடங்கப்பட்டு 4 கிலோ மீட்டர் தூரம் வாய்க்கால் வெட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
தற்காலிகமாக நிறுத்தம்
வாய்க்கால் வெட்டப்படும் இடங்களில் தண்ணீர் ஊற்றெடுத்து தண்ணீர் நிற்கிறது. இரவு, பகலும் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
தற்போது கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதன் காரணத்தால் வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story