வேலூர் மாவட்டத்தில் மேலும் 3 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை
வேலூர் மாவட்டத்தில் மேலும் 3 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் தினமும் ஏராளமான நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வேலூர் குடியாத்தம், பேரணாம்பட்டு, அடுக்கம்பாறை ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான அறிகுறி காணப்படும் நபர்கள் கொரோனா சிறப்பு மையங்கள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி., நறுவீ, ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக காட்பாடியில் உள்ள இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் வள்ளலாரில் உள்ள மணிசுந்தரம் மருத்துவமனை. சந்தியாபாபு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சந்தியாபாபு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த மருத்துவமனைகளில் கொரோனா வார்டு ஓரிருநாளில் பயன்பாட்டிற்கு வரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story