வரத்து அதிகாிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி


வரத்து அதிகாிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 13 May 2021 6:03 PM GMT (Updated: 13 May 2021 6:03 PM GMT)

வரத்து அதிகாிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நொய்யல்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கவுண்டன்புதூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளனர். பின்னர் தேங்காய் விளைந்தவுடன் பறித்து தேங்காய்பருப்புகளை காயவைத்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கின்றனர். வரத்து அதிகரிப்பால் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.122-க்கு விற்பனையானது இந்த வாரம் ரூ.110-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ஒரு கிலோ முழுதேங்காய் ரூ.35-க்கு விற்றது இந்த வாரம் ரூ.33-க்கு விற்பனையானது.


Next Story