நாமக்கல்லில் தொற்று பரவல் அதிகரிப்பு: கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம்
நாமக்கல்லில் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மோகனூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தினசரி 100-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு வந்தனர். இந்தநிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடப்பட்டு வந்த இடத்தில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே தடுப்பூசி போடும் பணி நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள தாய், சேய் நல விடுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. தற்போது தொற்று பரவல் தீவிரம் அடைந்து இருப்பதால், பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நேற்று தாய், சேய் நல விடுதியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.
இதற்கிடையே கோவாக்சின் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகவும், 2-வது டோஸ் போடுவதற்கு பலர் காத்திருப்பதால், கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story