கொல்லிமலையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு


கொல்லிமலையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
x

கொல்லிமலையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல், மே.14-
கொல்லிமலையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாசலூர்பட்டி அருகே உள்ள பெரியசோளிதண்ணிப்பட்டியை சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் சரியாக செல்போன் டவர் கிடைக்கவில்லை. எனவே அருகில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த கார்த்திக் (வயது 23) என்ற வாலிபர் மாணவியை பின்தொடர்ந்து சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். அவரது பெற்றோர் வாழவந்திநாடு போலீசில் புகார் செய்தனர். முதல்கட்ட விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கை நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர்.
விசாரணை
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தலைமறைவான கார்த்திக்கை வலைவீசி தேடி வருகிறார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story