நெல்லை அருகே டாஸ்மாக் பார் உரிமையாளர் கொலை: கைதான 4 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்
நெல்லை அருகே டாஸ்மாக் பார் உரிமையாளர் கொலையில் கைதான 4 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பேட்டை:
நெல்லை அருகே டாஸ்மாக் பார் உரிமையாளர் கொலையில் கைதான 4 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பார் உரிமையாளர் கொலை
நெல்லை அருகே உள்ள பேட்டை மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி என்ற கணேச பாண்டியன் (வயது 54). இவர் பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். தினமும் இவர் பாரில் தனது அறையில் தங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் காலையில் தனது அறையின் கணேச பாண்டியன் சாமி கும்பிட தயாராக நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (32), அப்துல் காதர் (30), விஜி (25), மைதீன் ஷேக் (25) ஆகிய 4 பேரும் அரிவாளால் கணேச பாண்டியனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேச பாண்டியன் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கணேச பாண்டியன் உறவினரான முருகன் என்பவரது ஆட்டை 4 பேரும் திருடி சென்று விற்றோம். இது அவர்களுக்கு தெரியவரவே கணேச பாண்டியன், அவரது தம்பி துரை பாண்டியன் மற்றும் முருகன் ஆகியோர் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். நாங்கள் கணேச பாண்டியனிடம் புகாரை வாபஸ் பெற்று கொள்ளுமாறும், ஆட்டுக்கான பணத்தை தருவதாகவும் கூறினோம். ஆனால் அவர் புகாரை வாபஸ் பெற மறுத்து விட்டார்.
மேலும் இந்த புகார் கொடுப்பதற்கு காரணமாக இருந்தது கணேச பாண்டியன் தான் என்பது எங்களுக்கு தெரியவந்தது. இதனால் அவரை நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்தோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story