கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: மேலும் ஒரு வாலிபர் சாவு


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்:  மேலும் ஒரு வாலிபர் சாவு
x
தினத்தந்தி 14 May 2021 12:36 AM IST (Updated: 14 May 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் ஒரு வாலிபர் பலியானார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சிதம்பர செல்வம் (வயது 25). பத்தமடையை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (29). இவர்கள் 2 பேரும் கங்கைகொண்டான் சிப்காட்டில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் 2 பேரும் நேற்று முன்தினம் வேலை முடிந்து ஒரு மோட்டார் சைக்கிளில், தங்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சிதம்பர செல்வம் ஓட்டினார்.

பாளையங்கோட்டை தருவை பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியில் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக சிதம்பர செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிதம்பர செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். முத்து கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story