தனியார் நிதிநிறுவனங்கள் பொதுமக்களை வற்புறுத்தி பணம் வசூலிக்கக்கூடாது
தனியார் நிதிநிறுவனங்கள் பொதுமக்களை வற்புறுத்தி பணம் வசூலிக்கக்கூடாது என்று தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் அறிவுரை கூறப்பட்டது.
மணப்பாறை, மே.14-
மணப்பாறை பகுதியில் தனியார் நிதி நிறுவனங்கள் கொரோனா கால ஊரடங்களிலும் பொதுமக்களை வற்புறுத்தி பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுதொடர்பாக சிலர் மணப்பாறை தாசில்தார் லெஜபதிராஜிடம் புகார் அளித்தனர். பின்னர் இதுதொடர்பான பேச்சுவார்த்தை மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் லெஜபதிராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் புகார் அளித்த சிலரும், தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அப்போது கொரோனா கால ஊரடங்கு காலத்தில் தனியார் நிதிநிறுவனங்கள் பொதுமக்களை வற்புறுத்தி பணம் வசூலிக்கக்கூடாது என்று நிதிநிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து பேச்சுவார்த்தை முடிவு பெற்றது.
Related Tags :
Next Story