சுரண்டையில் வீட்டில் புகுந்த புள்ளிமான் தீயணைப்பு படையினர் பிடித்தனர்


சுரண்டையில்  வீட்டில் புகுந்த புள்ளிமான்  தீயணைப்பு படையினர் பிடித்தனர்
x
தினத்தந்தி 14 May 2021 12:58 AM IST (Updated: 14 May 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் புள்ளிமான் வீட்டில் புகுந்தது.

சுரண்டை:

சுரண்டை, ஆலடிப்பட்டி, கீழச்சுரண்டை ஆகிய கிராம பகுதிகளில் கடந்த 2 நாட்களாக புள்ளிமான் ஒன்று சுற்றி வருவதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் புள்ளிமான் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடம் அருகே உள்ள முட்புதரில் சென்றதை பார்த்த சிறுவர்கள் சுரண்டை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் மானை மீட்க போராடினார்கள். அப்போது துள்ளிக் குதித்த மான் அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்தது. உடனடியாக விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மானை பிடித்து அதனை கயிற்றால் கட்டி தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி ஆலங்குளம் வனத்துறையினரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றனர். 

Related Tags :
Next Story