சங்கரன்கோவிலில் ஜவுளிக்கடைக்கு சீல் வைப்பு
சங்கரன்கோவிலில் ஜவுளிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் அரசு விதிமுறையை மீறி கடையைத் திறந்து வியாபாரம் செய்வதாக நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தாசில்தார் ராம்குமார், நகராட்சி சுகாதார அலுவலர் பாலசந்தர், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமார் உள்ளிட்டோர் ஜவுளிக்கடைக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஜவுளிக்கடையைத் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஜவுளிக் கடைக்கு சீல் வைத்து ரூ.5000 அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story