வரதட்சணை கொடுமை; கணவன் கைது


வரதட்சணை கொடுமை; கணவன் கைது
x
தினத்தந்தி 14 May 2021 1:04 AM IST (Updated: 14 May 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை வரதட்சணை கொடுமை செய்ததாக கணவன் கைது செய்யப்பட்டார்.

வாடிப்பட்டி,மே.
மதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் மாலதிக்கும் (வயது 24), பரவையை சேர்ந்த சகாயராஜ் மகன் கவுரிசங்கருக்கும் (29) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 51 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர். 
இந்த நிலையில் தற்போது மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் மாலதி புகார் கொடுத்தார். அதன் பேரில் கவுரி சங்கர் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து கவுரி சங்கரை போலீசார் கைது செய்தனர்.

Next Story