சரவண பொய்கையில் மூழ்கி கொத்தனார் சாவு
சரவண பொய்கையில் மூழ்கி கொத்தனார் சாவு
திருப்பரங்குன்றம்,மே.
திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோடு முனியாண்டி கோவில் சந்து பகுதியில் வசித்து வந்தவர் பழனிகுமார் (வயது 40). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் மாலையில் சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்றதாக தெரிகிறது. அங்கு படிக்கட்டில் அமர்ந்து பழனிக்குமார் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பொய்கைக்குள் தவறி விழுந்து ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். பின்னர் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பழனிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story